/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் வீடியோ வெளியிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை: உறவினர்கள் மறியல்

ADDED : அக் 03, 2024 06:15 AM

மதுரை : மதுரை மாவட்டம், பைக்காராவைச் சேர்ந்த பிரகாஷ், 26, என்ற ஆட்டோ டிரைவருக்கு ஷர்மிளா என்பவருடன் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சமீபத்தில் தொழில் ரீதியாக சில நாட்கள் வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது, பைக்காராவைச் சேர்ந்த சில டிரைவர்கள், பிரகாஷூடன் வேறு ஒரு பெண்ணை இணைத்து அவதுாறு கருத்துகளை பரப்பியுள்ளனர். இது தொடர்பாக அவரது நண்பர்கள் பிரகாஷூக்கு தகவல் தெரிவித்தனர்.
விரக்தியடைந்த அவர், அவதுாறு பரப்பியவர்களுக்கு எதிராக வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'ஆட்டோ டிரைவர் ராஜா என்பவர் தான் என் தற்கொலைக்கு காரணம்' எனக் கூறியுள்ளார். அதன்பின் அச்சம்பத்து பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் பிரகாஷின் உறவினர்கள் சிலர் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.