தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆட்டோ ஓட்டுநர் உண்ணாவிரதம்

ஆட்டோ ஓட்டுநர் உண்ணாவிரதம்

ஆட்டோ ஓட்டுநர் உண்ணாவிரதம்


ADDED : ஆக 21, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார், பாலமேட்டில் 80க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பாலமேட்டில் இருந்து கேட்கடை வரை மற்றும் கேட்கடை முதல் முடுவார்பட்டி வரை என 2 பிரிவாக ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

முடுவார்பட்டி செல்லும் ஆட்டோ பாலமேடு பகுதிக்கு ஆட்களை ஏற்றிச் செல்வதால் இப்பகுதி ஆட்டோக்களின் வருவாய் பாதிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அனுமதிக்காத வழித்தடத்தில் அத்துமீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகக் கூறி கேட்கடையில் பாலமேடு பகுதி ஆட்டோ சங்கத்தினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயநல்லுார் டி.எஸ்.பி.,ஆனந்த்ராஜ், தாசில்தார் சுந்தரவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். துறை அதிகாரிகள் அனுமதி பெற்ற வழித்தடத்தில் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us