ADDED : ஆக 21, 2026 06:44 PM
திருமங்கலம்: திருமங்கலம் பி.கே.என்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் ஹோம் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கான பயோபைட்-26 எனும் கலைத்திறன் போட்டிகள் நடந்தன.
இதில் கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். கல்லுாரித் தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். செயலாளர் முரளி, பொருளாளர் மணிசங்கர் முன்னிலை வகித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலை மரபணு பொறியியல் துறை பேராசிரியர் அசோக் குமார் துவக்கி வைத்தார். லேடி டோக் கல்லுாரி, அமெரிக்கன் கல்லுாரி, சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி அரசு கல்லுாரி, விருதுநகர் வி.எச்.எஸ்.என்., கல்லுாரி, வி. வி. வி., கல்லுாரி உள்ளிட்ட 14 கல்லுாரிகளின் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் காணொளி காட்சிகள் மற்றும் திட்ட அறிக்கைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்தினர். குறும்பட போட்டிகள் நடனப் போட்டிகள் போன்றவை நடந்தன. வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. உயிர் வேதியல் துறை தலைவர் ஜெகதீஷ் சந்திர போஸ் நன்றி கூறினார்..
