ADDED : ஆக 21, 2026 06:01 PM
பெருங்குடி: மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராணன் கல்லுாரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில் வேதியியல் மற்றும் நிலையான ஆற்றலின் புதிய முன்னேற்றம் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் குபேந்திரன் வரவேற்றார்.
தென் கொரியாவின் யெங்னம் பல்கலை பேராசிரியர் மைக்கேல் ரூபி ராஜ், ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஞானசுந்தர ராஜ் பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் வேதியியல், மின்வேதியியல், பேட்டரி, சூரிய ஆற்றல், பசுமை வேதியியல், சுற்றுச்சூழல், வேதியியல் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கருத்துக்களை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கினர். பேராசிரியர்கள் மணிவேல், சரவணகுமார், அருண் ஒருங்கிணைத்தனர்.
