/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுனர் உரிமம் வீடுதேடி வரும் நடைமுறையில் ஏற்படும் சிக்கல் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
/
ஓட்டுனர் உரிமம் வீடுதேடி வரும் நடைமுறையில் ஏற்படும் சிக்கல் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ஓட்டுனர் உரிமம் வீடுதேடி வரும் நடைமுறையில் ஏற்படும் சிக்கல் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ஓட்டுனர் உரிமம் வீடுதேடி வரும் நடைமுறையில் ஏற்படும் சிக்கல் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 07, 2024 05:43 AM
மதுரை: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமத்தை வீடுதேடி வரும் வகையில் தபால் மூலம் அனுப்புவதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் புதுப்பித்தல் உரிமம், வாகன பதிவுச் சான்று, தகுதிச் சான்றிதழ் பெற, விண்ணப்பதாரர்கள் காலையிலும், மாலையிலும் நேரடியாக ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்து செல்ல வேண்டி இருந்தது.
சமீபத்தில் புதிய வசதியாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்று, தகுதிச்சான்று போன்றவை தபால் மூலம் விண்ணப்பதாரர் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என பொதுமக்கள் குறைகூறுகின்றனர்.
பொதுமக்கள் விண்ணப்பிக்கும், ஆதார் முகவரிக்கே ஓட்டுனர் உரிமம் அனுப்பப்படுகிறது. விண்ணப்பதாரர் அப்போது வேறு வீட்டில் குடியிருந்தால் அதைப் பெறுவதில் சிரமம் உள்ளது, என்கின்றனர்.
ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு பல நாட்களாகிறது. வெளியூரில் வேலை செய்வோர் 'பேஸ் லெஸ்' முறையில் நேரடியாக செல்லாமல் எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பித்து, ஓட்டுனர் பழகுநர் உரிமத்தை நேரடியாக பெறுவர். இனி அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுதான் பெற முடியும் என்கின்றனர்.
மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைவர் தெய்வராஜ், பொதுச் செயலாளர் கனகவேல், பொருளாளர் அறிவழகன் உட்பட பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஓட்டுனர் உரிமம் உட்பட சான்றுகளை தபால் மூலம் அனுப்புகின்றனர். பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் வாடகை வீடுகளில் உள்ளனர். அடிக்கடி வீடுமாறி செல்வோருக்கும் இதில் சிரமம் ஏற்படுகிறது. கணிசமான ஆட்டோ தொழிலாளர்கள் தவணையில் ஆட்டோ வாங்கி தொழில் செய்கின்றனர்.
இவர்கள் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளது. மேலும் தபாலில் அனுப்பும் ஆவணங்கள் முறையாக கிடைப்பதிலும், சிலநேரம் தவறிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே முன்பு போலவே ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேரடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

