/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: போக்குவரத்து மாற்றம்
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: போக்குவரத்து மாற்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: போக்குவரத்து மாற்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 13, 2025 03:54 AM
மதுரை : அவனியாபுரத்தில் நாளை (ஜன. 14) நடக்கவுள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு இன்று (ஜன. 13) காலை 9:00 மணி முதல் போக்குவரத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுவதாக மதுரை நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
n அவனியாபுரம் பைபாஸ் ரோடு பெரியார் சிலை சந்திப்பில் இருந்து அவனியாபுரம் நகருக்குள் செல்லவும், அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்லவும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவனியாபுரம் பைபாஸ் ரோடு, வெள்ளக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும்.
n திருப்பரங்குன்றத்தில் இருந்து முத்துப்பட்டி சந்திப்பு வழியாக அவனியாபுரம் செல்ல அனுமதி இல்லை. வெள்ளக்கல் பிரிவு, கல்குளம், வெள்ளக்கல், அவனியாபுரம் பைபாஸ் ரோடு வழியாக மதுரை அல்லது பெருங்குடி செல்லலாம். ஹர்சிதா மருத்துவமனை - மருதுபாண்டியர் சிலை சந்திப்பில் இருந்து அய்யனார் கோவில் வழியாக அவனியாபுரம் செல்ல அனுமதி இல்லை.
வாகன நிறுத்தம்
n ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் - முத்துப்பட்டி சந்திப்பில் காளைகளை இறக்கிவிட்ட பின், வெள்ளக்கல் வழியாக அவனியாபுரம் பைபாஸ் ரோடு சென்று வைக்கம் பெரியார் நகர் ரோடு, வெள்ளக்கல் கிளாட்வே மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். மதுரையில் இருந்து டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் டி மார்ட் வணிக வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
n பெருங்குடி, செம்பூரணி ரோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் 'கே 4' உணவகம் அருகே ஏற்பாடு செய்துள்ள நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி வழியாக வரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஜே., பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கு பெற்ற காளைகளை அவனியாபுரம் பைபாஸ் - செம்பூரணி ரோடு சந்திப்பில் வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்.