ADDED : மே 31, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களில் தேர்வு செய்யப்படுவோருக்கு சுதந்திர தினவிழாவின் போது விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
கலெக்டர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.25 ஆயிரம், சான்று வழங்கப்படும். இதேபோல சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு தங்கப்பதக்கமும், ரூ.50 ஆயிரமும், சேவையாற்றிய டாக்டர்கள், வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனம், சமூகப்பணியாளர், அதிக கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு தங்கப்பதக்கமும், சான்றும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள், @https://awards.tn.gov.in' என்ற இணையதள முகவரியில் ஜூன் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்.