/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 22, 2024 05:19 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு செய்வது, யாருக்கு பதிவு செய்துள்ளோம் என்பதை வி.வி.,பாட் திரையில் பார்த்து உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டுச்சாவடி முகாம் அமைத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு குறித்து விளக்கம் பெற விரும்புபவர்களுக்கு மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு செய்வது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் விளக்கமளிக்கின்றனர்.
வரும் லோக்சபா தேர்தல் வரை இந்த முகாம் செயல்படும். விரைவில் மக்கள் கூடும் எல்லா இடங்களிலிலும் நடத்த உள்ளோம், என தெரிவித்தனர்.