நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் கீழையூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சார்பு நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா வழக்குகளை கையாளும் விதம், விவாகரத்து வழக்கு குறித்து சட்ட ஆலோசனை வழங்கினார். முகாமில் தாசில்தார் செந்தாமரை, வழக்கறிஞர்கள் ஜோதிமணி, துரைப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் சபாபதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமேனி, செயலாளர் சுரேந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.