ADDED : மே 22, 2025 04:29 AM
கொட்டாம்பட்டி: மதுரை தோட்டக்கலை துறை மற்றும் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து கம்பூரில் வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னையை பாதுகாப்பது குறித்த முகாமில் விவசாயிகள் பயனடைந்தனர்.
பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ், என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் மூலமும், மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 8-15 வைத்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒட்டு பொறிகளை சுத்தம் செய்ய வேண்டும். தவிர 5 மி.லி., வேப்ப விதைச்சாறு கலந்து தெளிக்கலாம். தவிர வெள்ளை ஈ தாக்குதலினால் ஏற்படும் கரும்பூசனத்தை ஒரு கிலோ மைதா மாவை ஐந்து லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பின் 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்ற தொழில் நுட்ப ஆலோசனை வழங்கினார். மாநில கரும்பு விவசாய சங்க துணைத் தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.