UPDATED : நவ 23, 2026 06:08 PM
ADDED : நவ 23, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மேலுார் அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்டில் நடந்த பிரசாரத்தில் மதுரை மண்டல ஆய்வாளர் பிரபு, மருந்துகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். பிரசாரத்தில், மருத்துவர் பரிந்துரை இன்றி, பொது மக்கள் தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினர்.
