ADDED : ஆக 30, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக. 31 –
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்து, மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், என்ன வகை உணவுகள் உட்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
