/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலதாமதமின்றி வருமான வரி தாக்கல் செய்யும் அறக்கட்டளைகள் வரிவிலக்கு சலுகை பெறலாம் விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்

ADDED : செப் 19, 2025 02:36 AM

மதுரை: 'காலதாமதமின்றி கடைசி நாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்யும் அறக்கட்டளைகள், கோயில் நிர்வாகங்கள், வரி விலக்கு சலுகையை பெற முடியும்' என மதுரையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பீ.பி.குளம் வருமான வரி அலுவலகத்தில் விலக்குப் பிரிவு சார்பில் நடந்தது. ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். கோவை வருமான வரி விலக்கு இணை கமிஷனர் தீபக் கூறியதாவது: வருமான வரி, ஒருவர் பெறும் வருமானத்திற்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்துவது. அத்தகைய வரி செலுத்துவதில் இருந்து கோயில் உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றன. அதற்கு கோயில் அறக்கட்டளை நிர்வாகம் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். பெறப்படும் வருமானத்தில் 85 சதவீதத்தை கோயில், பக்தர்கள் நலனிற்காக செலவழிக்க வேண்டும்.
அவ்வாறு செலவழிக்க வில்லை எனில் வரித் தாக்கல் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுடன் கடைசி நாளுக்குள் வரித் தாக்கல் செய்தால் மட்டுமே முழுமையான வரிச் சலுகையை பெற முடியும். இன்றைய தொழில்நுட்ப உலகில், வரித் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகம் வராமல் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளலாம் என்றார்.
அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன் கூறுகையில், ''கடைசி நாளுக்குள் முறையாக வரித் தாக்கல் செய்யாமல், அதன் விளைவுகளை கோயில் அறக்கட்டளைகள் சந்திக்கின்றன. மதுரை மண்டலத்தில் வரித் தாக்கல் செய்யாத முக்கிய கோயில்களின் வருமானத்துடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரையில் வருமான வரி கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன'' என்றார். வருமான வரி தாக்கல் தொடர்பான சந்தேகங்களுக்கு கருணாநிதி, ராஜாராம், ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் அளித்தனர்.