ADDED : ஆக 29, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் தீபா வரவேற்றார். மேலாண்மை குழுத் தலைவர் சுந்தரவள்ளி, துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். புதிய தலைவர், நிர்வாகிகளின் தேர்தல் குறித்த தகவல்கள், நெறிமுறைகள் விளக்கப்பட்டன. பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெற்றோர் வழங்கினர். ஆசிரியர் கிரேஸ் பாக்கியமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சித்ராதேவி நன்றி கூறினார்.
