தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உயிரிழக்கும் பனை மரங்கள்: வறட்சியில் உசிலம்பட்டி

உயிரிழக்கும் பனை மரங்கள்: வறட்சியில் உசிலம்பட்டி

உயிரிழக்கும் பனை மரங்கள்: வறட்சியில் உசிலம்பட்டி


UPDATED : ஆக 29, 2026 07:15 PM

ADDED : ஆக 29, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 07:15 PM ADDED : ஆக 29, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியிலிருந்து எழுமலை வழியாக எம்.கல்லுப்பட்டி செல்லும் ரோட்டில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான பனை மரங்கள் வளர்ந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்துள்ள இந்த பனை மரங்களில் இருந்து கோடை சீசனுக்கு வளரும் நுங்குகளை இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பறித்து சாப்பிடுவார்கள்.

2 ஆண்டுகளாக மழைப்பொழிவு மிகவும் குறைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பலத்த காற்று வீசுவதால் அடுத்தடுத்து பனைமரங்கள் இல்லாமல் தனியாக உள்ள பனைமரங்கள் காய்ந்து உயிரிழந்து வருகின்றன. மொத்தமாக உள்ள பனைமரங்கள் மத்தியிலும் சில மரங்கள் காய்ந்து பட்டுப்போய் வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தாலும் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்திருக்கக் கூடிய பனைமரங்களே பட்டுப்போகும் அளவிற்கு இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us