UPDATED : அக் 12, 2026 06:15 PM
ADDED : அக் 12, 2026 05:59 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் கிளாட்வே சிட்டி குடியிருப்போர் நலச் சங்கம், குடியிருப்போர்களுடன் திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி தலைமை வகித்தார். மண்டலம் 5 உதவி கமிஷனர் குமரன், துப்புரவு ஆய்வாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தனர். குப்பையை முறையாக தரம் பிரித்தல், கழிவுகளை அகற்றுதல், சுற்றுப்புற துாய்மையை பராமரித்தல், திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
