/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை, மேலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம்
/
மதுரை, மேலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 16, 2024 07:40 AM
மதுரை,: மதுரை லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி சார்பில் கல்லுாரி மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துணை கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். ரயில்வே ஸ்டேஷன் முன் துவங்கி மதுரை கல்லுாரி வளாகத்தில் முடிவுற்றது.
வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 'வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை' உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துராமலிங்கம், முத்துமுருகேச பாண்டியன், உதவி கமிஷனர்கள் ரெங்கராஜன், ஷாஜஹான், கல்வி அலுவலர் ரகுபதி, துணைத் தாசில்தார் வீரக்குமார் பங்கேற்றனர்.
மேலுார்:
தேர்தல் பிரிவு சார்பில் நடந்த விழாவிற்கு தாசில்தார் முத்துபாண்டியன் தலைமை வகித்தார். தாசில்தார் லட்சுமிபிரியா முன்னிலை வகித்தார். தாலுகா அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். வருவாய்அலுவலர்கள் கண்ணன், முனியசாமி, சுதர்சன் பங்கேற்றனர்.
* நாவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் இந்திரா தலைமை வகித்தார். பேரணியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா, சிறப்பு பயிற்றுநர் தானியேல் தனசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

