ADDED : மார் 14, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில், மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சார்பில் 'ஒன்றிணைவோம் சமத்துவம் காப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் அன்பரசு வரவேற்றார். போலீஸ் எஸ்.பி., அரவிந்தன், கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.,க்கள் விஜயகுமார், சந்திரன், செக்கானுாரணி இன்ஸ்பெக்டர் திலகவதி, இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா, புள்ளியியல் ஆய்வாளர் வில்வபதி, கல்லுாரி அரைஸ் இயக்குனர் லாசர், ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்கள் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு பாடல்கள், நாடகம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். எஸ்.ஐ., கிருஷ்ணபாண்டி நன்றி கூறினார்.

