ADDED : மார் 20, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். வண்ண பலுான்களை பறக்க விட்டும், உறுதிமொழி எடுத்தும், கையெழுத்து இட்டும், போட்டோ பாயின்டில் நின்று படம் எடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி. அர்விந்த், டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி உட்பட பலர் பங்கேற்றனர்.

