ADDED : ஜூன் 28, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். கல்லுாரி வேலை வழிகாட்டுக் குழுத் தலைவர் சுமித்ரா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். பேராசிரியர் ஞானகுரு அறிமுக படுத்தி பேசினார்.
இன்ஸ்பயர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகி மாதேஸ்வரன், டி.என்.பி.எஸ்.சி குரூப்- 2 தேர்வில் ராங்க் பதினெட்டில் தேர்வான முத்துக்குமரன் பேசினர். கல்லுாரி பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர். பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பாண்டியராஜன், அமிர்தவர்ஷினி முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.