ADDED : ஆக 31, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய கிளப் சார்பில் எச்.பி.வி., சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். மாணவி சஹானா வரவேற்றார். பேராசிரியர் கவுரி சங்கர் அறிமுக உரையாற்றினார். டாக்டர் நளினி நித்திலா செல்வி உட்பட பலர் பேசினர்.
மாணவி ஹேமா நன்றி கூறினார்.

