ADDED : டிச 18, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் வளர்ந்துவரும் போக்குகள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரித் தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் முனைவர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி ஆரோக்கிய பிரிசில்லா வரவேற்றார். உதவிப் பேராசிரியை கீர்த்திகா அறிமுக உரையாற்றினார்.
மதுரை கல்லுாரி பேராசிரியர் வெண்ணிலா பேசினார். மாணவி விஷாலி நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி, உதவிப் பேராசிரியர்கள் வனிதா, தாமரைச்செல்வி ஒருங்கிணைத்தனர்.

