ADDED : ஆக 24, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியின் சைபர் ஜாக்ருதா கிளப், டி.வி.எஸ்., சி.எஸ்.ஆர்., சார்பில் இன்றைய உலகில் இணையப் பாதுகாப்பு மற்றும் சைபர் ஹைஜீன் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, இயக்குநர் பிரபு, டீன் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். சைபர் ஜாக்ருதா கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். மதுரை சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு பேசினார். மாணவர் நிர்மா, மாணவி ஸ்வாதி ஒருங்கிணைத்தனர்.
