ADDED : ஆக 24, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் மாணவர்கள் தொழில் முனைவோராக மாறுவது விதியின் செயல் அல்ல. அது மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு திகழ்வது என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவர் நவீன் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சீனிவாசன், கருவேல பாண்டியன், முருகராஜ் பேசினர். பேராசிரியர்கள் ராம சென்ராயர், சுகன்யா ஒருங்கிணைத்தனர். மாணவர் விஷ்ணு சுந்தர் நன்றி கூறினார்
