ADDED : ஜூலை 10, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவ துறை சார்பில் மேலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு மருத்துவமனை சி.எம்.ஓ., ஜெயந்தி வரவேற்றார். சுகாதாரப்பணிகள் இணை, துணை இயக்குனர்கள் செல்வராஜ், நடராஜன் துவக்கி வைத்தனர். கிரெசன்ட் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் ஜெயபாண்டி, மதுரை பேஸ் அறக்கட்டளை இயக்குனர் மனோகரன், ப்ரோசிகா தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
டாக்டர் கலாமணி நன்றி கூறினார்.