ADDED : ஆக 13, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்' என பிரதமர் மோடியின் வேண்டுகோள் அடிப்படையில் மதுரை அஞ்சல் கோட்டம் சார்பில் ஸ்காட் ரோடு பாலம் முதல் வடக்கு வெளி வீதி தலைமை தபால் அலுவலகம் வரை 'இல்லம் தோறும் மூவர்ணக்கொடி 2025' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தபால் நிலைய முதுநிலை அஞ்சலக அதிகாரி வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தலைமை வகித்தார். தலைமை அஞ்சலக தபால்காரர்கள், தபால் ஊழியர்கள் பங்கேற்றனர். அனைத்து தபால் நிலையங்களிலும் ரூ.25 க்கு தேசியக்கொடி விற்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

