ADDED : ஆக 27, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உசிலம்பட்டி குழந்தை யேசு ஆலயத்தில் இளைஞர் ஞாயிறு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொடியேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்க உறுப்பினர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பங்குத்தந்தை இக்னேசியஸ் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. உசிலம்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.