ADDED : டிச 21, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிச.17 முதல் 26 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் நடத்தப்படுகிறது. இதையொட்டி மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் பிரவீன்குமார் தொடங்கி வைத்தார். துறை துணை இயக்குநர் சுசிலா வரவேற்றார். கவிஞர் ரவி, தொல்காப்பியர் மன்றத் தலைவர் இருளப்பன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் கர்ணன் பங்கேற்றனர். மதுரை வக்பு வாரியக் கல்லுாரி, அரசு இசைக் கல்லுாரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

