UPDATED : அக் 08, 2026 07:13 PM
ADDED : அக் 08, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
மதுரை: உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், கண்களை கட்டிக்கொண்டு நடக்கும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
காந்தி மியூசியம் முதல் மருத்துவமனை வரையான பேரணியை மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட் மதுகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதன்மை டாக்டர் கிம் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கிருஷ்ணதாஸ், மனோரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ., ராமநாதன், சரவணன் ஏற்பாடுகளைச் செய்தனர்.
