தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‛இந்தியன் 3’ மீண்டும் துவங்குகிறது

‛இந்தியன் 3’ மீண்டும் துவங்குகிறது

‛இந்தியன் 3’ மீண்டும் துவங்குகிறது


UPDATED : அக் 08, 2026 07:27 PM

ADDED : அக் 08, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:27 PM ADDED : அக் 08, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‛இந்தியன்’ படத்திற்கு பின் 28 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் 2024ல் வெளியான ‛இந்தியன் 2’ படம் தோல்வி அடைந்தது. இதனால் பாதிக்கு மேல் எடுக்கப்பட்ட ‘இந்தியன் 3 ’தொடர்வதிலும் பிரச்னை எழ படம் கிடப்பிற்கு போனது. தற்போது அந்த பிரச்னைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ‘இந்தியன் 3 ’பட பணிகள் துவங்குவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஐ ஆம் கேம்’ தோல்வி ஏன் : துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‛ஐ ஆம் கேம்’ படம் தோல்வி அடைந்தது. இதுபற்றி வலைதளத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “சில சமயங்களில் நம் தரப்பில் எல்லாம் சரியாக செய்தாலும் வெளிக் காரணிகளால் அது தலைகீழாக மாறிவிடும். எந்த தயாரிப்பு நிறுவனமோ, நடிகரோ மோசமான படத்தை உருவாக்க நினைப்பதில்லை. நிஜ வாழ்வில் நாம் நினைத்தபடியா எல்லாம் நடக்கிறது. நான் எப்போதும் என் குழுவிற்கு துணையாக இருப்பேன். யாரையாவது குறை சொல்ல விரும்பினால் என்னை குறை சொல்லுங்கள்’’ என்றார்.

ராமராக வாழ்ந்தவர் இப்போது தசரதரானார்

நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இதன் முதல்பாகம் வருகிற தீபாவளியை முன்னிட்டு பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஒருகாலத்தில் இந்திய ரசிகர்களால் ராமராக போற்றப்பட்ட நடிகர் அருண் கோவில் தான் இதில் அயோத்தியின் மன்னரும், ராமரின் தந்தையுமான தசரதராக நடித்துள்ளார். இவரின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

‘ஜெயிலர் 2’ : தள்ளிப்போன இரு படங்கள்

நடிகர் ரஜினியின் ‛ஜெயிலர் 2’ படம் அடுத்தவாரம் அக்.15ல் வெளியாகிறது. இதனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் இதற்கு அடுத்தநாள் வெளியாக இருந்த தனுஷின் ‛ஓம்’ படம் தள்ளி வைக்கப்பட்டது. இதை போலவே விஜய் ஆண்டனியின் ‛அப்பா குட்டி’ படமும் தள்ளிப்போகிறது. படம் வெளியாக ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் படம் பற்றிய எந்த புரமோஷனும் நடக்கவில்லை. இதேபோல் அக். 23ல் வெளியாக இருந்த விஷ்ணு விஷாலின் ‛இரண்டு வானம்’ படமும் தள்ளிப்போகிறது.

‘பிக்பாஸ்’ முத்துக்குமரன் மீது பெண் குற்றச்சாட்டு

‘பிக்பாஸ் ’நிகழ்ச்சியின் 8வது சீசன் டைட்டில் வின்னரான முத்துக்குமரன், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக அவரது பெண் தோழி வஹிதா வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் தற்கொலைக்கு முயன்று, தற்போது மருத்துவமனையில் நலமுடன் உள்ளார். இதுபற்றி முத்துக்குமரன் அளித்த விளக்கத்தில், ‘‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என சத்தியமாக புரியவில்லை. இதுபற்றி கிளாரிட்டி கேட்டுள்ளேன். அவர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்’’ என்றார்.

ராமராஜனின் ஆசை

இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் படம் 'கடவுள் தந்த பரிசு'. இது இவர்கள் இணையும் 25வது படமாகும். காசிமாயன் இயக்குகிறார். ‛‛மக்கள் ரசிக்கும் கதைகளையே எப்போதும் கொடுக்க விரும்புகிறேன். மதுரையில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்த நான் இன்று இந்தளவுக்கு வர முக்கியமானவர்களில் இளையராஜாவும் ஒருவர். அவர் தந்த பாடல்களால் தான் பிரபலமானேன். எனது 50வது படத்தை நானே இயக்கவும், அதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’’ என்கிறார் நேற்று தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடிய ராமராஜன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us