ADDED : செப் 23, 2024 05:35 AM
மதுரை : மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் துறையின் தேவைக்கேற்ப ஆற்றல் மற்றும் திறன் நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பேராசிரியை நிர்மலா வரவேற்றார். மதுரை விவசாய கல்லுாரி டீன் மகேந்திரன் தலைமை வகித்தார். கோவை வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், பேராசிரியர் செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உழவியல் தொழில்நுட்பங்களில் ஆற்றல் திறன் நிர்வாகம் பற்றி பேசினர்.
இணைப் பேராசிரியர் ஆனந்த் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா ஆண்டை முன்னிட்டு பொன்விழா 'டார்ச்' வைக்கப்பட்டது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. தீபச்சுடர் விருதுநகர் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.