ADDED : நவ 19, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் டிரஸ்ட் சார்பில் வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலநிலை மாற்றம் நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த கருத்தரங்கு நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை முன்னிலை வகித்தார். விருதுநகர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா உள்ளிட்டோர் பேசினர். பசுமை படை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு களிமண் பொம்மை தயாரிப்பு முறைகள் குறித்து ஹரிகிருஷ்ணன் பயிற்சி அளித்தார். 115 பசுமைப்படை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.