ADDED : டிச 07, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மகளிர் மேம்பாட்டு குழு, டில்லி பல்கலை மானியக் குழு, மதுரை காமராஜ் பல்கலை பெண்கள் மையம் சார்பில் இணையதளம் மூலம் நடக்கும் குற்றச்செயல்களை தடுப்பது,
இணையதளத்தை மாணவியர் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாணவி ஹரிணி வரவேற்றார். மாணவி மாரி ஹேமா அறிமுக உரையாற்றினார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாபு பேசினார். மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஷ்ணுசுபா முகாம் ஏற்பாடு செய்தார்.

