நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் மக்கள் மன்றம், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், நேஷனல் புக் டெஸ்ட் ஆப் இந்தியா, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நடைபயிற்சி நண்பர்கள், ஜெயண்ட்ஸ் குரூப் சார்பில் திருநகர் சவிதாபாய் பள்ளியில் 7 நாள் நடந்த புத்தக கண்காட்சியின் நிறைவு விழா, விருது வழங்கும் விழா, பரிசளிப்பு விழா நடந்தது.
மக்கள் மன்றத் துணைத் தலைவர் பொன் மனோகரன் தலைமை வகித்தார். தலைவர் செல்லா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் பாலகிருஷ்ணன் சான்றிதழ், பரிசு வழங்கினார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாமித்துரை, பாலகிருஷ்ணனுக்கு சங்கப் புலவர் விருதை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் அறம் வழங்கினார்.

