UPDATED : ஜூலை 18, 2026 07:17 PM
ADDED : ஜூலை 18, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரதிய கிசான் சங்கம், நறுமணப்பொருட்கள் வாரியம் சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் நல்லு வரவேற்றார். நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
சமவெளிகளில் வாசனைப்பயிர்கள் சாகுபடிக்கான வாய்ப்புகள் குறித்து இணைப்பேராசிரியர் ஆனந்த் பேசினார். நறுமணப் பொருட்கள் உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையான வாய்ப்பு, வனச்சட்டம் குறித்து நறுமணப்பொருட்கள் வாரிய தேசிய உறுப்பினர் அசோகன் பேசினார். சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள், மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், கொடைக்கானல் நிர்வாகி தீபன் கார்த்திக் கலந்து கொண்டனர்.
