ADDED : ஆக 31, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் சிங்கப் பெண்களின் சிங்கப்பாதை என்ற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கோபிசன் துவக்கி வைத்தார்.
இதில் பெண்கள், கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பு செயலி எஸ்.ஓ.எஸ்., ஆப், சிங்கப்படை அவசர எண்: 1091 குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, தல்லாகுளம் இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி (போக்குவரத்து), வினித்குமார், தன்னார்வலர்கள் பிரதீபா, சபிதா, வைஷ்ணவி, பிருந்தா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விருட்சா எண்டர்டயிமென்ட் நிறுவனர் ரஞ்சிதா செய்திருந்தார்.
