நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: மேலவளவு, கொட்டாம்பட்டி வட்டாரத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த நடந்த முகாமில் ஏராளமான விவசாயிகள் பயன்அடைந்தனர்.
துணை இயக்குநர் கமலா லெட்சுமி, உதவி இயக்குநர் சுபாசாந்தி, ஊராட்சி தலைவி தங்கம் தலைமை வகித்தனர். மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.
துணை வேளாண் அலுவலர் தனசேகரன், தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவிமேலாளர்கண்ணன், பயிர் அறுவடை அலுவலர் சேது கலந்து கொண்டனர்.

