நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது.
ரோட்டோர கடைகள், உணவகங்கள், சந்தை, பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
செயல் அலுவலர் செல்வகுமார், இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் ராமு உட்பட பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.