ADDED : ஆக 19, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட்ரிப்பன் கிளப், சாரணர் இயக்கம் சார்பில் போதையில்லாத தமிழகம், விபத்து இல்லாத மதுரை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, செஞ்சிலுவை சங்க சேர்மன் ஜோஸ், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்றனர். போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, பேராசிரியர் கலைவாணி ஒருங்கிணைத்தனர்.
