ADDED : ஆக 19, 2026 06:02 PM
மதுரை: மதுரை பனையூர் திருவள்ளுவர் காலனி கூலித் தொழிலாளி நந்தினி. மகன் 10ம் வகுப்பும், மகள் 9ம் வகுப்பும் படிக்கின்றனர். இவரது வீட்டுக்கு 17 ஆண்டுகளாக மின்இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி உதவியுடன் படித்து வந்தனர். பக்கத்து வீடுகளுக்கெல்லாம் இருந்த நிலையில், இவருக்கு மட்டும் கிடைக்காமல் சிரமப்பட்டார்.
இவரது வீட்டுக்கு மேல் தாழ்வான நிலையில் மின்பாதை சென்றதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் மின்இணைப்பு வழங்க இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும் என்ற நிலையில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம் மனு கொடுத்துள்ளார்.
இதையடுத்து கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின்வாரிய அலுவலர்கள் நுகர்வோர் பங்களிப்பு திட்டத்தில் புதிய கம்பம் நட்டு, வீட்டுக்கு மின்இணைப்பும் வழங்கினர். 17 ஆண்டு பிரச்னை உடனே தீர்வுக்கு வந்துள்ளது.
