/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதை வினியோகம்
/
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதை வினியோகம்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதை வினியோகம்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ், அட்சதை வினியோகம்
ADDED : ஜன 01, 2024 05:49 AM

மதுரை; மதுரையில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் அயோத்திர ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழ் வினியோகம் துவங்கியது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜன.22 அன்று ராமனின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை வினியோகிக்க, மதுரை பொறுப்பாளர்களிடம் வழங்குவதற்கான விழா நேற்று நடந்தது.
விஷ்வஹிந்து பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுக உரையாற்றினார். இதில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தா, சாரதா சமிதி சுவாமி சதாசிவப்பிரியா, ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி அர்க பிரபானந்தா, திருவேடகம் ராமகிருஷ்ண தபோவனம் பரமானந்த சுவாமி, நிலையூர் சுப்ரமணியானந்தா, சின்மயா மிஷன் ஜீதேஷ் சைதன்யா, அறக்கட்டளையின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் மங்களமுருகன், துணைத் தலைவர் ராஜசேகரன், ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் மகேஷ், வி.எச்.பி., மாநில நிர்வாகிகள் சுதாகர், சீனிவாசன், கோவிந்தராஜன், கோட்ட பொறுப்பாளர் பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயகார்த்திக், தங்கராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மதுரை ஆதினம் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஹிந்து அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் ராமர் ரதம் கொண்டுவரப்பட்டது. அப்போது சிலர் கோயில் கட்ட விடுவோமா என்றனர். நான் ஹிந்து மதத்தினர் அனைவரும் இணைந்து கட்டுவோம் என்றேன். இன்று பிரதமர் மோடியின் முயற்சியால் இந்த விழா நடக்க வேண்டும் என்பது இறைவனின் கருணையாக உள்ளது.
பொதுமக்களுக்கு ராமர் கோயில் துவக்க விழாவிற்கு அட்சதை வழங்கப்படுகிறது. ஹிந்துக்கள் அனைவரும் துவக்க விழாவின்போது தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, அட்சதையை வைத்து பூஜை செய்து ராமர் அருளை பெறுவோம், என்றார்.