/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவதியில் அய்யங்கோட்டை அங்கன்வாடி குழந்தைகள்
/
அவதியில் அய்யங்கோட்டை அங்கன்வாடி குழந்தைகள்
ADDED : ஜூலை 16, 2025 01:39 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி அலுவலகம், உயர்நிலைப் பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இம்மையத்தில் சுற்றுச்சுவர், 'பேவர் பிளாக்' மற்றும் முன்பக்க தகர ஷீட் அமைக்கப்பட்டது.
மையம் அருகே 40 ஆண்டுகளுக்கு முன் கிணறுடன் அமைக்கப்பட்ட பழைய மேல்நிலைத் தொட்டி உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள இத்தொட்டியில் இருந்து வெளியேறும் குடிநீர் மையத்தில் குளம் போல் தேங்குகிறது. இதில் குழந்தைகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
மூன்று மாதங்களாக மையத்திற்கு குடிநீர் விநியோகம் இல்லை. தண்ணீர் வசதியில்லாததால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். தொட்டியின் கீழ்பகுதியில் அமைந்துள்ள அறை சமூகவிரோதிகளுக்கு மதுக்கூடமாக பயன்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு கருதி அபாயகரமான தொட்டியை அகற்றி புதிதாக கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.