/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோவில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
/
அழகர்கோவில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
ADDED : ஏப் 01, 2025 05:07 AM
மதுரை: மதுரை - அழகர்கோவில் இடையே 18.5 கி.மீ., ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இருவழிப் பாதையாக இருந்த இந்த ரோட்டை தமிழக நெடுஞ்சாலைத் துறையின் மதுரை கோட்ட நிர்வாகம் 4 வழிச்சாலையாக மாற்றி வருகிறது. ரூ.22 கோடி மதிப்பிலான இந்த ரோடு, இருபுறமும் தலா 7.5 மீ., தார் ரோடு, நடுவில் 1.5 மீ., மீடியன் என மொத்தம் 16.5 மீ., அகலத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.
கோரிப்பாளையம் பகுதியில் துவங்கும் இந்த ரோட்டில் 15 கி.மீ., வரை ரோடு அகலப்படுத்தும் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளன. கள்ளந்திரி முதல் அழகர்கோவில் வரையான ரோடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேசமயம் கள்ளந்திரியில் பெரியாறு பிரதான கால்வாயில் பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. ஏப்.15 வரை தண்ணீர் திறந்து விடப்படும். இதில் பாலம் அமைக்கும் பணிக்கு நீர்வளத்துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனவே ஏப்.15 க்குப்பின் பணிகள் நடைபெற உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் ஆகியோர் பணிகளை பார்வையிட்டுதுரிதப்படுத்தினர்.