/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி இறந்த ஆண் சிசு; தொடர் இறப்பால் விழிப்புணர்வு அவசியம்

ADDED : ஜூலை 30, 2025 06:52 AM
உசிலம்பட்டி; உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது.
எருமார்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜன் 26, பிரியா 23. கடந்தாண்டு திருமணம் நடந்தது. பிரியாவுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஜூலை 26ல் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று காலை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிசு மயங்கியது. நீண்ட நேரம் அசைவின்றி இருப்பதாக மருத்துவப் பணியாளர்களிடம் கூற, பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிசு இறப்பில் சந்தேகம் இல்லை என பிரேத பரிசோதனை செய்யாமல் உறவினர்களிடம் கொடுத்தனர். அடக்கம் செய்ய ஆட்டோவில் கொண்டு சென்ற போது சிசுவின் உடலில் அசைவு ஏற்பட்டதாக உணர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். டாக்டர்கள் பரிசோதித்து சிசு உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
ஜூலை 28ல் வீட்டில் தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 9 மாத பெண் சிசுவை இம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் பலனின்றி இறந்தது. பிரசவத்திற்கு வரும் பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவப் பணியாளர்கள் விழிப்புணர்வும், ஆலோசனையும் வழங்க வேண்டும்.