ADDED : மார் 11, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர், பி தொட்டியபட்டி பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளில் கோழி, மீன் கழிவுகளை பேரையூர் - டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி சாலையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடைபயணம் செல்வோர் அவதிப்படுகின்றனர். இப்பகுதிக்கு வரும் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, இறைச்சி கழிவுகளை போட்டி போட்டு, சண்டையிட்டு உண்ணுகின்றன. சண்டையின் போது தெறித்து ஓடும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே விழுந்து வாகன ஓட்டிகளை நிலை தடுமாறச் செய்கின்றன. இவ்வகையில் சிலர் காயமடைந்துள்ளனர். எனவே, சாலை ஓரம் கழிவுகளை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

