ADDED : ஆக 22, 2026 05:43 PM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சாம்பியன் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் பாட்மின்டன் போட்டிகள் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லுாரியில் நடந்தது.
ஏ மண்டல சாம்பியன் அமெரிக்கன் கல்லுாரி, பி,. சி, டி மண்டல சாம்பியன் பட்டம் பெற்ற மதுரைக் கல்லுாரி, திண்டுக்கல் ஜி.டி. என்., கல்லுாரி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லுாரிகள் லீக் முறையில் பாட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளிலும் வென்ற அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. ஜி.டி.என். கல்லுாரி இரண்டாமிடம், எஸ்.பி.கே. கல்லுாரி மூன்றாமிடம், மதுரைக்கல்லுாரி நான்காமிடம் பெற்றன.
முதல்வர் பால் ஜெயகர், துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் நிர்மல் சிங் ராஜ்பெல், பல்கலை உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பாராட்டினர்.
