/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்
/
கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்
ADDED : நவ 25, 2025 05:10 AM
மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கவின் கொலை வழக்கில் சிறையில் உள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அதில், சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் கவின் கொலை வழக்கில் எனக்கு இல்லை. ஜாமின் கோரிய மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார்.
மனு தாரர் தரப்பில், 'எஸ்.ஐ.,யாக பணியாற்றிய மனுதாரர், சம்பவத்தன்று பணியில் தான் இருந்தார். சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி., தரப்பில், மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்த ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கவின் தாயார் தரப்பில், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து விசாரணையை நவ.,27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

