/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியுடன் பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியுடன் பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியுடன் பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியுடன் பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : அக் 07, 2025 04:07 AM

மதுரை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி -- பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி பஜாஜ் இன்ஜினியரிங் ஸ்கில்ஸ் ட்ரெயினிங்(பெஸ்ட்) மையம் இக்கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கும்.
பஜாஜ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி மையம் தென் தமிழத்தின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இம்மையத்திற்கு தியாகராஜர் கல்லுாரி சார்பில் கட்டடம் மற்றும் இதர பணிகளுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் சார்பில் ரூ.16 கோடி மதிப்பிலான நவீன இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
முதற்கட்ட பயிற்சி வரும் ஜனவரியில் துவங்கும்.
இந்த பயிற்சியின் மூலம் ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், எலக்ட்ரானிக், மெக்கட்ரானிக்ஸ், இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவர்கள் பயன்பெறுவர். செப்., 2026ல் முழு அளவில் இந்த மையம் பயன்பாட்டு வரும்.
அப்போது நவீன தயாரிப்பு துறை, மின்னணு பிரிவு, மின் வாகன பிரிவு மாணவர்கள் மற்றும் இதர அனைத்து பிரிவு மாணவர்களும் பயன்பெறுவர்.
முதற்கட்டத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1200 மணவர்களும், பிற கல்லுாரிகளைச் சேர்ந்த 200 மாணவர்களும் பயிற்சி பெறுவர்.
முழு அளவில் பயிற்சி மையம் செயல்பட துவங்கும் போது ஆண்டிற்கு 6 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் துணைத்தலைவர் சுதாகர் குடிபட்டி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன், முதல்வர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வுஒப்பந்தம் தென் மாவட்ட கல்வி-பயிற்சி சூழலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன் கூறினார்.