/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்பதிவில்லா டிக்கெட் ரூ.1.03 கோடி வருமானம்
/
முன்பதிவில்லா டிக்கெட் ரூ.1.03 கோடி வருமானம்
ADDED : அக் 07, 2025 04:07 AM
மதுரை: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம், நேற்றுமுன்தினம் (அக். 5) மட்டும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் மூலம் ரூ. 1.03 கோடி வருமானம் ஈட்டியது.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து தென்மாவட்ட பயணிகள் சென்னை செல்ல வசதியாக, நேற்றுமுன்தினம் மதுரை, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
மதுரையில் இருந்து புறப்பட்ட 'மெமு' ரயிலில் 1200 பேரும், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் 2000 பேரும் பயணித்தனர்.முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்றுமுன்தினம் ஒருநாள் மட்டும்83 ஆயிரத்து 256 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் மூலம் ரூ. 1.03 கோடி வருமானத்தை மதுரைக் கோட்டம் ஈட்டியது. விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில் ரயில்வே போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தனர்.
புகார்: ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு ரயில் பராமரிப்பு பணி காரணமாக திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஈரோடு ரயிலில் 12 பெட்டிகள் இருந்த நிலையில், சிறப்பு ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருந்ததால்பலர் கூட்ட நெரிசலில் சிக்கினர். சிறப்பு ரயில் என்ற பெயரில் பெட்டிகளைகுறைத்து அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.