/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பேக்கரி உரிமையாளர் கைது
/
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பேக்கரி உரிமையாளர் கைது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பேக்கரி உரிமையாளர் கைது
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பேக்கரி உரிமையாளர் கைது
ADDED : ஜன 22, 2025 04:32 AM
உசிலம்பட்டி : செல்லம்பட்டி சங்கம்பட்டியில் பட்டியலின சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ள நிலையில், உசிலம்பட்டியில் சம்பளத்தை அதிகரித்துதரக்கோரியவரை சாதிப் பெயரைச் சொல்லி தாக்கிய பேக்கரி உரிமையாளரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி கீழமாதரை காலனியைச் சேர்ந்தவர் பழனியாண்டவர் 55. இவர் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். தனக்கு தினசரி வழங்கப்படும் ரூ.400 சம்பளத்தை ரூ.500 ஆக உயர்த்தித்தரும்படி கேட்டுள்ளார். பேக்கரி உரிமையாளர் கோபி 37 ,மற்றும் ரவி, நித்திஷ், சாமியார் ஆகிய நான்கு பேர் சேர்ந்து சம்பளம் அதிகமாகக் கேட்டவரை சின்னச்செம்மேட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது சாதிப்பெயரை சொல்லி திட்டியதுடன், சம்பளம் கூடுதலாகவா கேட்கிறாய் என அடித்துள்ளனர். இது குறித்து நால்வர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.